கோவையில் சாலை ஓரத்தில் துணியால் சுற்றி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி..!

குழந்தையை யார் வீசி சென்றது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே துணியால் சுற்றிய நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தை உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் அடுத்த நீலிகோணம்பாளையம் கோபாலசாமி கோவில் எதிரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று தொப்புள்கொடி அகற்றாத நிலையில், மஞ்சள் துணிப்பையில் சுத்தி போடப்பட்டுள்ளது.

அப்போது குழந்தை அழுத குரல் கேட்டு பொதுமக்கள் சென்று பார்த்த போது குழந்தை துணியால் சுற்றப்பட்டு வீசப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் குழந்தையை மீட்டு முதலுதவி அளித்து கோவை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குழந்தையை வீசிச் சென்றது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். குழந்தையை யார் வீசி சென்றது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே துணியால் சுற்றிய நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தை உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...