இந்திய அளவில் உணவு பாதுகாப்பு தர வரிசை பட்டியல் வெளியீடு - தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை…!

பெரிய மாநிலங்களுக்கான தர வரிசையில், தமிழகம் முதல் முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 18 மதிப்பெண்கள் கூடுதலாக பெற்று முதல் இடம் பிடித்து தமிழகம் சாதனை படைத்துள்ளது.


கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7-ம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு "பாதுகாப்பான உணவே சிறந்த ஆரோக்கியம்“ என்ற தலைப்பில் உணவு பாதுக்காப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும்உணவுப் பாதுகாப்பு தினத்தையோட்டி, இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் இந்திய அளவில் உணவு பாதுகாப்பு தர வரிசையை வெளியிடும். இதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான உணவு பாதுகாப்பு தரவரிசையை மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்வெளியிடப்பட்டுள்ளது.

இதில், தமிழகம் முதல் முறையாக முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.5 நிலைகளில் உணவுப் பாதுகாப்பு துறையின் செயல்பாடு ஆய்வு செய்யப்பட்டு இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு தொடர்பாக பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை, உணவுப் பாதுகாப்பு துறையிடம் உரிய அனுமதி பெறுபவர்களின் எண்ணிக்கை, உணவு சோதனை மற்றும் தொடர் ஆய்வுகள், உணவுப் பாதுகாப்பு தொடர்பாக துறை அலுவலர்களுக்கு பயிற்சி, நுகர்வோரின் பங்களிப்பு உள்ளிட்ட 5 நிலைகளில் ஆய்வு செய்து இந்த தரவரிசை வெளியிடப்படுகிறது.

இதில், பெரிய மாநிலங்கள் பட்டியலில் கடந்த ஆண்டு கேரளா முதலிடம் பிடித்த நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

குஜராத் 2-வது இடமும், மகாராஷ்டிரா 3வது இடமும் பிடித்துள்ளது. முதல் இடத்தில் பிடித்த தமிழ்நாடு 82, குஜராத் 77.5, மகாராஷ்டிரா 70புள்ளிகளையும் பெற்றுள்ளது.



பல்வேறு அளவு கோள்களில்,மாநிலத்தின் ஒட்டுமொத்த

செயல்திறனைப் பாராட்டி, பெரிய மாநிலங்களில் முதல் இடத்தைப் பிடித்ததற்காக, நேற்று, ஜூன் 7ம் தேதி, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர், மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையர் மற்றும் சிறப்புப் பணி அதிகாரியான, பி.செந்தில்குமாருக்கு, விருதை வழங்கினார்.



அதே போல, சிறிய மாநிலங்கள் பட்டியலில் கோவா முதலிடமும், மணிப்பூர் 2வது இடமும், சிக்கிம் 3வது இடமும் பிடித்துள்ளது. யூனியன் பிரதேசங்களின் பட்டியலில், ஜம்மு-காஷ்மீர் முதலிடமும், டெல்லி 2வது இடமும், சண்டிகர் 3வது இடமும் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 18 மதிப்பெண்கள் கூடுதலாக பெற்று முதல் இடம் பிடித்து தமிழகம் சாதனை படைத்துள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...