50 வது உலக சுற்றுச்சூழல் தினம்: கோவை 'பிரிக்கால் லிமிடெட்' நிறுவனத்தில் 800 மரக்கன்றுகள் நடவு நிகழ்ச்சி!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை பிரிக்கால் லிமிடெட் நிறுவனத்தில் 800 மரக்கன்றுகள் நட்டு வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.


கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை பிரிக்கால் லிமிடெட் நிறுவனத்தில் 800 மரக்கன்றுகள் நட்டு வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.



பூவுலகில் இயற்கை, சூழலியல் மற்றும் உயிரியல் மேம்பாட்டிற்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள "உலக சுற்றுச்சூழல் தினத்தை” உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் கொண்டாடி வருகின்றனர். இயற்கை அன்னையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5ம் தேதி “உலக சுற்றுச்சூழல் தினம்" அனுசரிக்கப்பட்டு வருகிறது.



இந்த ஆண்டு, “ஒரே ஒரு பூமி” என்ற மையக் கருத்தை முன்னிருத்தி “இயற்கையுடன் இணைந்து நிலையான நல்லிணக்கத்துடன் வாழ்வது” குறித்து விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவதற்கான நோக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் ஒற்றுமை மேம்படுத்த மனிதகுலத்தினரிடையே அமைதி, நல்லிணக்கம், செழிப்பு மற்றும் ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க தேவையான ஆக்கபூர்வமான சூழலை உருவாக்குவது இந்த மையக் கருத்தின் நோக்கமாக உள்ளது. மேலும், இந்த கருத்து, நமது வாழ்வியல் முறைகளில் அனைத்து வகைகளிலும் மாசற்ற நிலைகளை உருவாக்கி இயற்கை அன்னையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.



தனி மனிதர்களால் செய்யப்படும் எந்த ஒரு சிறு முயற்சியும் சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். அந்த வகையில், 2022ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “பிரிக்கால் லிமிடெட்” நிறுவனத்தில் இயற்கை அன்னையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நிறுவன ஊழியர்கள், ஊழியர் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளிடையே மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.



50 வது உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “பிரிக்கால் லிமிடெட்” நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வனிதா மோகன்- Chairman, P.M.கணேஷ் Chief Executive Officer, அமீர்-Director Technology & Quality Systems, சித்தார்த் Chief Strategy Officer மற்றும் இதர ஊழியர்களுடன் இணைந்து இந்நிறுவன தொழிற்சாலைகளில் நேற்று 800 மரக்கன்றுகளை நட்டு வைத்து நமது பூமித்தாயை பாதுகாக்கும் உன்னத முயற்சியில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளனர்.







Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...