கோவை வால்பாறையில் 300 கிராம் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது!

கோவை வால்பாறை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் 300 கிராம் கஞ்சா பொட்டலம் விற்பனை செய்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.


கோவை: கோவை வால்பாறை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் 300 கிராம் கஞ்சா பொட்டலம் விற்பனை செய்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சில தினங்களாக கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வால்பாறை டவுன் பகுதியில் கக்கன் காலனி, மார்க்கெட், பள்ளிவாசல் போன்ற பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் சுற்றி திரிவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் சுற்றி திரிவதை உறுதி செய்து, அவரை அழைத்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் அருண்குமார் என்பதும் கக்கன் காலனி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவரிடம் விசாரணை செய்து பரிசோதனை செய்து பார்த்ததில் 300 கிராம் கஞ்சா பொட்டலம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை பார்த்தாலோ யாரேனும் சந்தேகத்துடன் சுற்றி திரிந்தால் வால்பாறை காவல் நிலையம் 222201 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தெரிவித்து உள்ளார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...