கோவையில் வியாசர் ஆன்மீக மையம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தள்ளு வண்டிகள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்..!

கோவை மாநகராட்சி 22-வது வார்டு மற்றும் 5வது வார்டு பகுதி தூய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு உதவும் வகையில் வியாசர் ஆன்மீக மையம் சார்பில், தள்ளு வண்டிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.


கோவை: வியாசர் ஆன்மீக மையம் சார்பில் 22-வது வார்டு மற்றும் 5-வது வார்டு பகுதி தூய்மை பணியாளர்களுக்கு தள்ளு வண்டிகள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

22வது வார்டு பகுதியில் அமைந்துள்ள வியாசர் ஆன்மீக மையத்தில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், திராவிட முன்னேற்ற கழகத்தின் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பையா (எ) R. கிருஷ்ணன் மற்றும் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் ஆகியோர் தலைமை வகித்தனர்.

22வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு மற்றும் 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் நவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



வியாசர் ஆன்மீக மையத்தின் தலைவர் கோபால்சாமி தள்ளு வண்டிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

7வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், 9வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி, 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா மணியன், திராவிட முன்னேற்ற கழகத்தின் 22வது வட்டச் செயலாளர் செல்வராஜ், 9வது வார்டு வட்டச்செயலாளர் மயில்சாமி உட்பட திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.



சமுதாய மக்களின் நலனுக்காகவும் தூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையிலும் தள்ளுவண்டிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய வியாசர் ஆன்மீக மையம் தலைவர் கோபால்சாமி அவர்களுக்கு மாமன்ற உறுப்பினர்கள் கோவை பாபு மற்றும் நவீன் குமார் ஆகியோர் வார்டு பொதுமக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...