5-ஆண்டுகளுக்கு பிறகு தடாகம் சாலைக்கு கிடைத்தது விடிவுகாலம்: திமுக அரசின் நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி..!

தடாகம் சாலை வெங்கட்டாபுரம், வேலாண்டிபாளையம், கோவில்மேடு, இடையர் பாளையம் பகுதியில் 7-கிலோமீட்டர் தொலைவிற்கு, சாலைகள் சுமார் 5-ஆண்டுகளுக்கும் மேலாக மோசமாக இருந்த நிலையில், சீர் செய்யும் பணி நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி.


கோவை: தடாகம் சாலை அகலப்படுத்தி சீர் செய்யும் பணியினை விரைந்து துவங்கி முடிக்க வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு முக்கிய சாலைகள், பழுதடைந்த நிலையில் உள்ளன. அவற்றை பழுது நீக்க வேண்டும், மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

அதன் பயனாக, கோவை மாவட்டத்தில், காளப்பட்டி, உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு, இடையர்பாளையம், லாலிரோடு, குறிச்சி, சுந்தராபுரம், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் 113 கோடி மதிப்பில் சாலை அமைப்பு, நகர்புற கட்டிடங்கள், அமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

113-கோடி ரூபாய் மதிப்பில், 32-கிலோமீட்டர் நீளத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

இதனிடையே, கோவை தடாகம் சாலை வெங்கட்டாபுரம், வேலாண்டிபாளையம், கோவில்மேடு, இடையர்பாளையம் பகுதியில் 7-கிலோமீட்டர் தொலைவிற்கு, சாலைகள் சுமார் 5-ஆண்டுகளுக்கும் மேலாக மோசமாக இருந்து வருகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரத்திலும் மழைக்காலங்களிலும் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் அந்த சாலையை அகலப்படுத்தி சீர் செய்யும் பணியை அமைச்சர் செந்தில்பாலாஜி இரு தினங்களுக்கு முன் துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...