பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் நோட்டீஸ் அனுப்பியவுடன் 7 தினங்களுக்குள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தெரிவித்தார்.
கோவை: பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் பாதுகாப்பு வசதி இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஜூன் 13-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 60க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்ரே சுபம் ஞானதேவ்-ராவ், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் சிறப்பு ஆய்வுக் குழு இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று, வாகன காப்பீடு, உள்ளிட்ட ஆவணங்கள் குறித்தும் கண்காணிப்பு கேமராக்கள், அவசரகால வழி, வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவசரகால வழி, கண்காணிப்பு கேமராக்களை காலை, மாலை, இரு வேலைகளிலும் ஆய்வு செய்து மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்கிறார்களா? என்பதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஜிபிஎஸ் கருவி மூலம் பெற்றோர்களுக்கு இணைப்பு வழங்கி சரியான நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதையும் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்புவதையும் பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் உறுதிப்படுத்த வேண்டும்.
பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் நோட்டீஸ் அனுப்பியவுடன் 7 தினங்களுக்குள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தெரிவித்தார்.