புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை: கோவையில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 3 சவரன் தாலி செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை கே.கே.புதூர், என்.ஆர்.ஜி வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவரது மனைவி சரஸ்வதி (42). இவர் வழக்கமாக மாலை நேரத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் நடை பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று மாலை நடைபயிற்சிக்கு சென்றுள்ளனர். அப்போது பூசாரி பழனியப்பா வீதி, சிண்டிகேட் அடுக்கு மாடி குடியிருப்பு அருகே வந்த போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், சரஸ்வதி அருகே வந்து திடீரென கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க தாலி செயினை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து சரஸ்வதி சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.