பரம்பிக்குளம் -ஆழியாறு பாசனத் திட்டம்: கோவை பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பொள்ளாச்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பொள்ளாச்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 4.25 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் அணைகளில் ஒன்றான பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 930 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆழியாறு அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் திருமூர்த்தி அணை பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை இந்த திட்டத்தை கைவிட எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று பொள்ளாச்சியில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவிவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

விவசாயிகளை வஞ்சிக்காதே, சோலை வனத்தை பாலைவனமாக மாற்றதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.

ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு சென்றால் பொள்ளாச்சி பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, பாசனத்திற்காக தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் எனவும், எனவே இந்த திட்டத்தை கைவிட தமிழக அரசு முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...