கோவை மாநகராட்சி ஆணையாளர் மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.45-க்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு..!

மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ மேட்டுப்பாளையம்‌ பேருந்து நிலையத்திலுள்ள பொதுகழிப்பிடம்‌ மற்றும்‌ கட்டண கழிப்பிடம்‌ சுகாதாரமான முறையில்‌ பராமரிக்கப்பட வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப் சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.45-க்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.45க்குட்பட்ட மேட்டுப்பாளையம்‌ பேருந்து நிலையத்தில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தூய்மைப்பணியாளர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்‌.



இதேபோல், மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ மேட்டுப்பாளையம்‌ பேருந்து நிலையத்திலுள்ள பொதுகழிப்பிடம்‌ மற்றும்‌ கட்டண கழிப்பிடம்‌ சுகாதாரமான முறையில்‌ பராமரிக்கப்பட வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப் சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



இதேபோல், மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.45க்குட்பட்ட மேட்டுப்பாளையம்‌ பேருந்து நிலையத்தில்‌ உள்ள அம்மா உணவகத்தில்‌ தயாரிக்கப்படும்‌ உணவுகள்‌ சுகாதாரமான முறையில்‌ தரமான உணவுகள்‌ வழங்கப்படுகிறதா என்பதையும்‌, உணவுப்‌ பொருட்கள்‌ இருப்பு குறித்த பதிவேடுகளையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆய்வு செய்‌தார்.



இதேபோல், மாநகராட்சி, மேற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.45, மேட்டுப்பாளையம்‌ பிரதான சாலை பகுதியிலுள்ள எம்‌.ஜி.ஆர்‌.மார்க்கெட்டில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆய்வு செய்தார்‌.



இதேபோல், மாநகராட்சி, மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.45க்குட்பட்ட இராமசாமி வீதி, எம்‌.ஜி.ஆர்‌.மார்க்கெட்‌ பின்புறம்‌ மக்கும்‌ குப்பைகளைக்‌ கொண்டு நுண்ணுயிர்‌ உரம்‌ (Micro Compost Centre) தயாரிக்கும்‌ மையத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆய்வு செய்தார்.



இதேபோல், மாநகராட்சி மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ உள்ள சங்கனூர்‌ பள்ளம்‌ ரூ.49 கோடி மதிப்பீட்டில்‌ மேம்பாட்டுப்பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆய்வு செய்தார்‌.



உடன்‌ மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ (கூடுதல்‌ பொறுப்பு) சரவணன்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹோமலதா, 45-வது வார்டு மாமன்ற உறுப்பினர்‌ பேபிசுதா ரவி, மண்டல சுகாதார அலுவலர்‌ பரமசிவம்‌, சுகாதார ஆய்வாளர்‌ சலேத்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்.



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...