கோவையில் செலவுக்கு பணம் தராததால் இளைஞருக்கு கத்தி குத்து - தப்பி ஓடிய நண்பனுக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவையில் செலவுக்கு பணம் தர மறுப்பு தெரிவித்த இளைஞரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய நண்பனை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் செலவுக்கு பணம் தர மறுப்பு தெரிவித்த இளைஞரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய நண்பனை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை புலியகுளம் அம்மன் குளம் 2வது வீதியை சேர்ந்தவர் அபிஷேக் (21). இவர் தனியார் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அபிஷேக் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார். அப்போது பாப்பநாயக்கன்பாளையம் காய் கடை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, அவரது நண்பர் கோகுல கிருஷ்ணன் (23) என்பவர் மறித்து அபிஷேக்கிடம் செலவுக்கு பணம் கேட்டார். அதற்கு அவர் தற்போது பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கோகுலகிருஷ்ணன் அபிஷேக்கின் செல்போனை பறித்துக் கொண்டார். அவர் திருப்பி கேட்டபோது, கோகுல கிருஷ்ணன் கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோகுலகிருஷ்ணன் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து அபிஷேக்கை தாக்கினார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி விட்டு சென்றார். இதில் அபிஷேக் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அபிஷேக் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...