கோவையில் முதியவர்களுக்கான உதவித் தொகையை ஊருக்கே கொண்டு வந்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதியவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: கோவையில் முதியவர்களுக்கான உதவித் தொகையை ஊருக்கே கொண்டு வந்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதியவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை பகுதியில் உள்ள தோலம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் முதியவர்கள் அரசு வழங்கும் உதவித்தொகையை தங்களது ஊருக்கு கொண்டு வந்து தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் அளித்த மனுவில், தோலம்பாளையம் கிராமத்தில் வயதானவர்கள், கணவனை இழந்த பெண்கள் என பலரும் வசித்து வரும் நிலையில் அரசு தரப்பில் தரப்படும் உதவித் தொகையை பெறுவதற்கு 16 கிலோ மீட்டர் தூரம் சென்று பெறவேண்டி உள்ளதாகும், பேருந்து வசதி சரிவர இல்லாததால் தனியார் வாகனத்தில் பல ரூபாய் செலவழித்து சென்று உதவித்தொகையை வாங்கும் சூழல் நிலவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஓய்வு ஊதியம் தரும் ஊழியர் மகேஸ்வரி, முதியவர்களை இழிவாக நடத்துவதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவது அதுவும் இதுகுறித்து பலமுறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மகேஸ்வரியிடம் உதவித்தொகை பெறுவதற்கு விருப்பமில்லை எனவும், வயதானவர்களுக்கான உதவித்தொகையை கிராமத்திற்கே கொண்டு வந்து கொடுத்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் ஊழியரின் கணவரும் தங்களை தகாத வார்த்தைகளால் இழிவுபடுத்துவதாகும் என்று தெரிவித்துள்ளனர்.