கோவை வார்டு எண்.61க்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

கோவையில் வார்டு எண் 61க்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இ.ஆ.ப., நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவையில் வார்டு எண் 61க்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இ.ஆ.ப., நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



ஆரம்ப சுகாதார மையத்தில்‌ கர்ப்பிணி தாய்மார்கள்‌, தாய்‌ சேய்களுக்கு போடப்படும்‌ தடுப்பூசிகள்‌, சிகிச்சை முறைகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., மருத்துவமனை செவிலியர்களிடம்‌ கேட்டறிந்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.61க்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ கர்ப்பிணிகள்‌, தாய் சேய்கள்‌ குறித்த பராமரிப்பு பதிவேடுகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.61க்கு உட்பட்ட பட்டத்தரசியம்மன்‌ சாலையில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ முறையாக உள்ளதா மற்றும்‌ தெருவிளக்குகள்‌ எரிகிறதா என்பது குறித்து பொதுமக்களிடம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., கேட்டறிந்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.61க்கு உட்பட்ட மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ சிங்காநல்லூர்‌ பேருந்து நிலையத்திலுள்ள பொது கழிப்பிடம்‌ சுகாதாரமான முறையில்‌ பராமரித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப.,சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தினார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.61க்கு உட்பட்ட பகுதியில்‌ தூய்மைப் பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகளை நேரில்‌ ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையுரை மற்றும்‌ பாதுகாப்பு உபகரணங்கள்‌ பயன்படுத்துவது குறித்து அறிவுறுத்தினார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.61க்கு உட்பட்ட மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையுரை மற்றும்‌ பாதுகாப்பு உபகரணங்கள்‌ குறித்து ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.61க்கு உட்பட்ட ஒக்கிலியர்‌ வீதி, ஆணையங்காடு வீதிகளில்‌ மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ திரு.மு.பிரதாப்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.59க்கு உட்பட்ட பகுதியிலுள்ள சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ சிங்காநல்லூர்‌ பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில்‌ வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின்‌ தரம்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப.,நேரில்‌ ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ சிங்காநல்லூர்‌ பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில்‌ வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின்‌ தரம்‌ மற்றும்‌ தமிழக அரசால்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., நேரில்‌ ஆய்வு செய்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...