நீதிமன்ற தீர்ப்பின் படி மடத்துக்குளம் கைத்தறி நெசவாளர்களுக்கு இடம் வழங்கவில்லை என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

இனியும் காலதாமதம் படுத்தினால் மடத்துக்குளம் தனி வட்டாட்சியர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நெசவாளர்கள் இன்று மனு அளித்தனர்.


திருப்பூர்: நீதிமன்ற தீர்ப்பின் படி மடத்துக்குளம் கைத்தறி நெசவாளர்களுக்கு இடம் வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கைத்தறி நெசவாளர்கள் 1998-ஆம் ஆண்டு அரசின் பங்களிப்புடன் பணம் செலுத்தி மடத்துக்குளம் தனி வட்டாட்சியர் 218-பேருக்கு 3-சென்ட் வீதம் 12 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளனர்.

ஆனால் அதன்பிறகு மாவட்ட நிர்வாகம் முறையாக பயனாளிகளுக்கு நிலத்தை அளவீடு செய்து வழங்காமல் வேறு நபர்களுக்கு வழங்கி விட்டதாக கைத்தறி நெசவாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையில் மாவட்ட நிர்வாகம் பயனாளிகளுக்கு நிலம் அளவீடு செய்து தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் 2019-ஆம் ஆண்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர்களுக்கும் அந்தந்த பகுதியில் பட்டா வழங்க ஏதுவான இடம் குறித்த விவரத்தை கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார்.

மூன்று வருடம் ஆகியும் நீதிமன்ற தீர்ப்பின்படி இதுவரை நிலம் வழங்க வில்லை இது குறித்து மீண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 8 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

இன்னும் 210-பேருக்கு பட்டா வழங்க வேண்டிய நிலையில் ஆகஸ்ட் மாதம் மேலும் 14 பேரின் விவரங்களை பட்டா வழங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பெற்றுக்கொள்ளப்பட்டது.



ஆனால் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பட்டா வழங்கப்படவில்லை நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் செயல்படும் அதிகாரிகள் தங்களை அலட்சியம் படுத்துவதாகவும், இனியும் காலதாமதம் படுத்தினால் மடத்துக்குளம் தனி வட்டாட்சியர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீமிடம் நெசவாளர்கள் இன்று மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...