கோவையில் உள்ள மளிகைக் கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்ற 14-வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்த கடை உரிமையாளரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் 14-வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் – மளிகை கடை உரிமையாளர் போக்சோவில் கைது செய்தனர்.
கோவையை சேர்ந்தவர் வாசுதேவன் (44). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கடந்த 6 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்,
இந்நிலையில் நேற்று காலை அவரது கடைக்கு பொருட்கள் வாங்க வந்த அதே பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுமியை, கடைக்குள் அழைத்த வாசுதேவன், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமி நடந்தது, அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
புகார் அடிப்படையில் வாசுதேவனை பிடித்து விசாரித்த போலீசார் அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.