வழிப்பாதையில் அஜாக்கிரதையாக இருசக்கர வாகனத்தில் வந்து விபத்து ஏற்படுத்திய நபர் மீது வழக்குப்பதிவு செய்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3-இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
பொள்ளாச்சி பாறைமேடு விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் 24-வயதான மணிகண்டன். தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் பணிக்கு செல்வதற்கு இன்று வீட்டில் இருந்து பாலக்காடு ரோடு வழியாக இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு வந்து கொண்டிருந்தபோது, ஒரு வழிப்பாதையில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் மணிகண்டன் மற்றும் எதிரே வந்த வாகனத்தில் இருந்த குமரன் நகரைச் சேர்ந்த 22 வயதான கார்த்திக் மற்றும் பின்னால் அமர்ந்து வந்த 22 வயதான ஸ்ரீனிவாசன் ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்நிலையில், மணிகண்டனின் இருசக்கர வாகனம் பின்னால் வந்த அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கியது. சத்தம் கேட்டு பேருந்தில் இருந்தவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் இறங்கி காயமடைந்தவர்களை மீட்டனர்.

இதில், மணிகண்டனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும், கார்த்திக் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக மணிகண்டனின் உறவினர் கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் ஒரு வழிப்பாதையில் அஜாக்கிரதையாக இருசக்கர வாகனத்தில் வந்து விபத்து ஏற்படுத்திய கார்த்திக் மீது வழக்குப் பதிவு செய்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.