கல்லறை இல்லாததால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பெரும் சிரமம் நிலவுவதாகவும் எனவே மாவட்ட ஆட்சியர் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
கோவை: மேட்டுப்பாளையம் தாலுக்கா நகர்புற கிராமங்களில் கல்லறை வேண்டி அனைத்து கிறிஸ்தவ திருச்சபை போதகர்கள் ஐக்கியத்தினர் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவில் நகர்ப்புற கிராமங்களில் கல்லறை வேண்டி அனைத்து கிறிஸ்தவ திருச்சபை போதகர்கள் ஐக்கியத்தை சார்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் மேட்டுப்பாளையம் வட்டாரத்திலுள்ள திருச்சபை பேராயர்கள், கல்லறை சம்பந்தமாக முன்னாள் முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பலமுறை சந்தித்து மனு அளித்ததாகவும், ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர். கல்லறை இல்லாததால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பெரும் சிரமம் நிலவுவதாகவும் எனவே மாவட்ட ஆட்சியர் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இந்த மனுவானது தலைவர் பால்மார்ட்டின் தலைமையில் அளிக்கப்பட்டது.