கோவை சேரன் மாநகரில் சொந்த நிதியில் பூங்காவை பராமரிக்கும் கவுன்சிலருக்கு மக்கள் பாராட்டு..!

டெண்டர் காலம் முடிந்தும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் நலன் கருதி பூங்கா தொடர்ந்து செயல்பட தனது சொந்த நிதியிலிருந்து நிதி உதவி செய்து ஊழியர்களை பணியமர்த்தி உள்ள கவுன்சிலரின் நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சேரன்மாநகர் பகுதி. ஏழாவது பஸ் ஸ்டாப் அருகே மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா சேரன்மாநகர் மட்டுமல்ல சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.



நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய இடவசதி, குழந்தைகள் விளையாட பல்வேறு உபகரணங்கள், கழிப்பிட வசதி, வனவிலங்குகளின் தத்ரூப சிலைகள் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் செயல்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் சிறப்பாக செயல்பட்டு வரும் பூங்காக்களில் சேரன்மாநகர் பூங்காவும் ஒன்று.

இந்த பூங்கா பராமரிப்பு பணி தனியாருக்கு விடப்பட்டிருந்த நிலையில் அந்த டெண்டர் காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பூங்கா மூடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு பூங்கா தொடர்ந்து செயல்பட கவுன்சிலர் நடவடிக்கை எடுத்தார். இதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர், கோவை பாபு கூறியதாவது:-

சேரன் மாநகரில் உள்ளபூங்கா மிக சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் முதியவர்கள், பெண்கள் உட்பட அனைத்து வயதினரும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்கின்றனர்.குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் டெண்டர் காலம் முடிந்தது குறித்து எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. மீண்டும் டெண்டர் எடுக்கப்படும் வரை பூங்கா மூடப்படுவது வழக்கம் என தெரிவிக்கப்பட்டது.



இது குறித்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல கூட்டத்தில் பேசினேன்.புதிய டெண்டர் எடுக்கப்படும் வரை அங்கு பூங்கா பராமரிப்பு ஊழியர்களுக்கு ஊதியம் என்பது உள்ளிட்ட அனைத்து செயல்களுக்கும் தேவையானஉதவியை எனது சொந்த நிதியில் இருந்து தருவது என முடிவு செய்து அதன்படி பூங்கா தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளேன்.



இந்த பூங்கா சிறப்பாக செயல்பட்டு வரும் போதும் செயற்கை நீரூற்று, பூங்கா வளாகத்தில் சீரமைப்பு பணி என்பது உள்ளிட்ட சில பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அடுத்து டெண்டர் எடுக்கும் நிறுவனத்திற்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டு தற்போது உள்ள சில குறைகளும் நீக்கப்பட்டு எந்த குறையும் இல்லாமல் பூங்கா செயல்படநடவடிக்கை எடுக்கப்படும்.

இவர் அவர் கூறினார்.



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...