உலக சுற்றுசூழல் தினம்: மரக்கன்றுகள் நடும் பணியினை கோவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுற்று சூழலை பேண வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அப்போது, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை அளித்தார்.


கோவை: நேற்று ஜூன் 5 கடைப்பிடிக்கப்பட்ட "உலக சுற்றுசூழல் தினம்" நேற்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுற்று சூழலை பேண வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.அப்போது, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை அளித்தார்.



அதனை தொடர்ந்து, அவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 5க்கும் மேற்பட்ட கிளிகளை பறக்க விட்டார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்.



நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள் வனத்துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...