முதல் முறையாக புலி குட்டிக்கு வேட்டையாடும் பயிற்சி: ரூ.75 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட கூண்டு!

தமிழகத்தில் முதல் முறையாக புலி குட்டிக்கு வேட்டையாடும் பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.75 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பெரிய கூண்டு உருவாக்கிய வனத்துறையினர் அதற்குள் புலியை கொண்டு சென்றுவிட்டனர்.


கோவை: தமிழகத்தில் முதல் முறையாக புலி குட்டிக்கு வேட்டையாடும் பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.75 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பெரிய கூண்டு உருவாக்கிய வனத்துறையினர் அதற்குள் புலியை கொண்டு சென்றுவிட்டனர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ம் தேதி இறக்கும் தருவாயில் முடிஷ் என்ற இடத்தில் சுற்றித்திரிந்த 8 மாதம் ஆன ஆண் புலிக்குட்டியை மானாம்பள்ளி வனத்துறையினர் மீட்டு ரொட்டிக் கடை பகுதியில் உள்ள மனித வன விலங்கு மோதல் தடுப்பு மையத்தில் வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்பு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாலும், வாகன போக்குவரத்து சத்தம் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்து புலிக்குட்டியை மானாம்பள்ளி வனப்பகுதிக்குள் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

சுமார் 6, 8 மாதங்கள் சிகிச்சை அளித்து பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் புலிக்கு தற்போது ஒன்றரை வயது ஆகிறது. புலி கூண்டிற்குள் உணவு அளிக்கப்பட்ட காரணத்தினால் புலியை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட முடியாது என்பதால், புலி வேட்டையாடும் திறன் இல்லாமல் இருப்பதாலும் புலியை வேட்டையாட பயிற்சி அளிக்க வனத்துறையினர் முடிவு செய்து சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில் கம்பி வேலி அமைத்து தண்ணீர் வசதி, ஓடி விளையாட கூடிய வசதி அமைத்து கொடுத்து சிறிய விலங்குகளை வேட்டையாடும் பயிற்சி அளிக்கப்பட்ட பின்பு புலியை வனப்பகுதிக்குள் விடுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும் விதமாக ரூ.75 லட்சம் செலவில் வனத்துறையினரால் அமைக்கப்பட்ட பெரிய கூண்டிற்குள் புலியை விட்டனர்.



இந்நிகழ்வில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராம் சுப்பிரமணி, பொள்ளாச்சி இணை இயக்குனர் கணேசன், மானாம்பள்ளி வனச்சரக மணிகண்டன், வால்பாறை வனச்சரக வெங்கடேசன் மற்றும் டாப்ஸ்லிப் வனசரகர் காசிலிங்கம், வனவிலங்கு மருத்துவர் ஸ்ரீதர், மனோகரன் மற்றும் என்ஜிஓ கணேஷ் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...