கண்காட்சியில், ராட்வீலர், பெல்ஜியன் ஷெப்பர்ட், பூடில், கிரேட் டேன், ராஜபாளையம், கோம்பை போன்ற நாய் இனங்களும், தமிழ்நாடு காவல்துறையின் மோப்ப நாய்களும் பங்கேற்றன. பல்வேறு இன நாய்கள் மற்றும் பூனைகளை பார்க்க குழந்தைகள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.
கோவை: கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் சர்வதேச நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக குழந்தைகள் கண்டுகளித்து வருகின்றனர்.

நடைபெற்று வரும், 18 வது சர்வதேச நாய்களுக்கான கண்காட்சியில், ராட்வீலர், பெல்ஜியன் ஷெப்பர்ட், பூடில், கிரேட் டேன், சிவாவா உள்ளிட்ட பல்வேறு இன நாய்களும், ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை போன்ற இந்திய நாய் இனங்களும் பங்கேற்றன.

அந்த நாய் இனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல்துறையின் மோப்ப நாய்கள் பங்கேற்றது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.

இதே போல, அதே இடத்தில் நடைபெற்ற பூனை கண்காட்சியில் பெர்சியன், பெங்கால், ஹிமாலயன், தேசி, சியாமிஸ், மீன் கூன் பூனைகள் போன்ற சுமார் 150 பூனைகள் கண்காட்சியில் பங்கேற்றன.

பஞ்சாப்பைச் சேர்ந்த நடுவர்கள் கோமல் தனோவா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஹரிஷ் படேல் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற நாய் இனங்களின் தரத்தின் அடிப்படையில் மதிப்பிட்டனர்.
மேலும், சுதாகர் கடிகினேனி, ஆனி கரோல் மற்றும் டாக்டர் பிரதீப் ஆகியோர் பூனைகள் கண்காட்சியை மதிப்பீடு செய்து வெற்றிபெற்ற பூனைகளை அறிவித்தனர்.

பல்வேறு இன நாய்கள் மற்றும் பூனைகளை பார்க்க குழந்தைகள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.