கோவை விவசாய நிலத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்…!

பேரூர் அடுத்த சென்னனூர் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்திற்குள் 3 குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 6 யானைகளை வனப்பகுதியில் விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கோவை பேரூர் அருகே உள்ள தனியார் விவசாய நிலத்தில் 3 குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 6 யானைகளை வனப்பகுதியில் விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூர் கெம்பனூர் வனப்பகுதியில் இருந்து மதுக்கரை வனச்சரகத்தில் உள்ள வனப்பகுதிக்கு அவ்வப்போது காட்டு யானைகள் இரவு நேரத்தில் கடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு கெம்பனூர் பகுதியில் இருந்து மூன்று குட்டிகளுடன் வெளியே வந்த 3 காட்டு யானைகள், பேரூர் அடுத்த சென்னனூர் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்திற்குள் புகுந்ததாக தெரிகிறது.

இரவு முழுவதும் அதே தோட்டத்தில் இருந்த காட்டுயானைகள், அங்கிருந்து செல்வதற்குள் விடிந்ததால், அதே பகுதியில் உள்ள புதர் அருகே முகாமிட்டது. இதை பார்த்த அப்பகுதி விவசாயிகள், போலுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.



விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானையை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடத் துவங்கினர்.

இன்று காலையிலும் தொடர்ந்து 3 குட்டி யானைகளுடன் இருந்த 3 பெண் யானைகளும், சென்னனூர் தனியார் தோட்டத்தில் முகாமிட்டு அருகே உள்ள ஆற்றிற்குள் இறங்கி பின் மீண்டும் அதே புதர் பகுதிக்குள் வந்ததால், போளுவாம்பட்டி, மதுக்கரை, கோவை வனச்சரக வன ஊழியர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் யானையை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலும், யானைகள் மதுக்கரை வனச் சரகத்திற்குள் செல்ல வாய்ப்புள்ளதால், இரவு யானைகள் அங்கிருந்து செல்லலாம் என வனத்துறையினர் என தெரிவித்துள்ளனர். இதனிடையே, பொதுமக்கள் யாரும் யானையின் அருகே செல்லாமலும், யானைகள் ஊருக்குள் வராமல் பாதுகாக்கவும், ஆங்காங்கே வனத்துறை ஊழியர்கள் பட்டாசுகளும் வனத்துறை ஜீப் மூலமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...