பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இருவர் கைது!

பொள்ளாச்சி அருகில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற இருவரை கைது செய்த கோட்டூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற இருவரை கைது செய்த கோட்டூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (40). இவர், விவசாயம் செய்து வருகிறார். கடந்த மே மாதம் 30ம் தேதி நா.மு.சுங்கம் அருகே உள்ள மதுக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர்கள் கோவை ரோடு ஈச்சனாரி அருகே இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பின்னர் அங்கு சென்ற போலீசார் திருடுபோன இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாண்டி (29) மற்றும் சேவகமூர்த்தி (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும், திருடு போன இருசக்கர வாகனத்தை அவர்களிடமிருந்து மீட்டு இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...