பொள்ளாச்சி அடுத்துள்ள கோடங்கிபட்டி பகுதியில் தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கண் வயர், இரண்டு மோட்டார்கள் மற்றும் ஒரு பகுதி தென்னை நார் எரிந்து சாம்பலானது.
கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள கோடங்கிபட்டி பகுதியில் தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கண் வயர், இரண்டு மோட்டார்கள் மற்றும் ஒரு பகுதி தென்னை நார் எரிந்து சாம்பலானது.
பொள்ளாச்சி அடுத்த கோடங்கிபட்டியில் திருமலைசாமி என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று பிற்பகல் தனியார் தொழிற்சாலையில் உள்ள கண் வயரில் உள்ள போல்ட் ஒன்று விழுந்துள்ளது. அதை சரி செய்வதற்கு வெல்டிங் அடிக்கும் போது அதிலிருந்து வந்த தீப்பொறி அருகிலிருந்த தென்னை நாரில் பட்டு தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக அங்கு வேலை செய்த நபர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். தென்னை நார் என்பதால் தீ மளமளவென பரவியது.
இதையடுத்து, இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் கண் வயர், இரண்டு மோட்டார்கள் மற்றும் ஒரு பகுதி தென்னை நார் எரிந்து சாம்பலானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.