யுபிஎஸ்சி தேர்வு: கோவையில் 24 மையங்களில், 9447 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் இத்தேர்வினை கோவை மாவட்டத்தில் 9447 பேர் எழுதுகின்றனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், யுபிஎஸ்சி தேர்வு இன்று நடைபெறுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 24 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்று வருகிறது.

முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் இத்தேர்வினை கோவை மாவட்டத்தில் 9447 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்விற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.



அதன்படி, துணை ஆட்சியர் நிலையில் 8 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 24 தேர்வு மையங்களுக்கு தேர்வு மைய ஆய்வு அலுவலர்களும் துணை வட்டாட்சியர் நிலையில் 40 தேர்வு மைய துணை கண்காணிப்பாளர்களும், 414 வரை கண்காணிப்பாளர்களும் மாவட்ட நிர்வாகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தேர்வு எழுதுபவர்கள், அந்தந்த தேர்வு மையங்களுக்கு செல்ல உக்கடம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர், பொள்ளாச்சி போன்ற புறநகர் பேருந்து நிலையங்களில் இருந்து போதிய போக்குவரத்து வசதிகளை மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...