கரூர் ஏற்றுமதியாளரிடம் ரூ.1.25-கோடி மதிப்பிலான நூலை பெற்று மோசடி: திருப்பூர் பல்லடம் அதிமுக நகர செயலாளர் கைது..!

அதிமுக நகர செயலாளரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், இவரின் மில்லில் காசாளராக பணியாற்றிய நபர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


திருப்பூர்: கரூர் ஏற்றுமதியாளர் இடம் ரூ.1.25-கோடி மதிப்பிலான நூலை பெற்று மோசடியில் ஈடுபட்ட பல்லடம் அ.தி.மு.க. நகர செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் செம்மடையை சேர்ந்தவர் அசோக் ராம்குமார் (40). இவர் கரூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் பல்லடம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி (40) நடத்தி வருகிற சங்கீதா மில்ஸ் நிறுவனத்தில் நூல் கொடுத்து, தறியில் நெய்துதுணியாக மாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு 1 லட்சம் கிலோ நூலை, துணியாக மாற்றி தரும்படி கொடுத்துள்ளார். ஆனால் நூலை பெற்றுக்கொண்டு ராமமூர்த்தி துணியாக மாற்றி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இந்த நூலின் மதிப்பு ரூ.1.25 கோடியாகும். மேலும், இது தொடர்பாக அசோக் ராம்குமார் கேட்கும் போது, ராமமூர்த்தி நூல், துணி மற்றும் பணம் என எதையும் தர முடியாது. என மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட பல்லடம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அசோக் ராம்குமார் புகார் கொடுத்தார்.

அதன்படி ராமமூர்த்தி மீது கடந்த 30-ந் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் ராமமூர்த்தியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், ராமமூர்த்தியின் மில்லில் காசாளராக பணியாற்றிய சங்கர் கணேஷ் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...