காளப்பட்டி, உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு, இடையர்பாளையம், லாலி ரோடு, குறிச்சி, சுந்தராபுரம், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் 113-கோடி மதிப்பில் சாலை அமைப்பு, நகர்புற கட்டிடங்கள், அமைக்கும் பணிகளை அமைச்சர் துவக்கி வைக்கிறார்.
கோவை: கோவையில் 113-கோடி மதிப்பிலான சாலை அமைப்பு மற்றும் நகர்ப்புற கட்டிடங்கள் அமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைக்கிறார்.
கோவை மாவட்டத்தில், காளப்பட்டி, உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு, இடையர்பாளையம், லாலி ரோடு, குறிச்சி, சுந்தராபுரம், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் 113-கோடி மதிப்பில் சாலை அமைப்பு, நகர்புற கட்டிடங்கள், அமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைக்கிறார்.
அதில் ஒரு நிகழ்வாக லாலி ரோடு உழவர் சந்தை அருகில் மருதமலை- வடகோவை சாலையில் சாலை அகலப்படுத்தும் பணியினை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநகராட்சியில் 53 இடங்களில் நகர் நல மையங்களுக்கு கட்டிடம் (தலா 25-லட்சம்) கட்டும் பணிகள், 10-மையங்கள் புரனமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு எனவும் தெரிவித்தார். மேலும் இன்று 32-கிமீ தொலைவிற்கு சாலை அமைக்கும் பணிகள், பராமரிப்பு பணிகள் அகலப்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், கோவை விமான நிலையம் விரிவாக்கத்தை பொறுத்தவரை 1132-கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 800-கோடி செலவில் நிலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்திற்கு 10-ஆண்டுகளுக்கான வரைவு திட்டங்கள்மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றுவருகிறது என தெரிவித்தார்.
நிதி ஆதாரம் மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை சாலையை விரிவாக்கம் என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், கோவை மாவட்டத்தில் முடிக்கப்பட்ட பாலங்கள் விரைவில் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார். தூத்துக்குடி அனல்மின் நிலைய நிலக்கரி விவகாரத்தில் அண்ணாமலை தெரிவித்ததற்கு அன்று மாலையே நான் பதில் அளித்தும் பத்திரிக்கையாளர்கள் ஏன் அவரிடம் கேள்வி கேட்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
நான் கூறும் கருத்துக்களில் ஏதேனும் தவறு இருந்தால் கூட என்னிடம்கேட்கலாம் என தெரிவித்தார். 500, 1000 என சொல்லியும் பத்திரிக்கையாளர்கள் அவரது செய்தியாளர் சந்திப்பிற்குச் செல்கிறீர்கள், உங்கள் மீதே அவதூறு பரப்புகின்றனர்.
அப்போது அனைவரும் அதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? எனவும் கேள்வி எழுப்பிய அவர், முன்வைக்கக்கூடிய அவதூறுகளுக்கு ஆதாரம் இருந்தால் நாம் பதில் சொல்லலாம் இல்லையெனில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் உடனிருந்தனர்.