இதுபற்றி தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அங்கிருந்த கும்பல் தாங்கள் வந்திருந்த லாரி மற்றும் பொருட்களை விட்டு விட்டு தப்பி சென்றனர்.
கோவை: கோவையில் இடத்தகராறில் தொழிலதிபர் மீது 10 பேர் கும்பல் ஓட ஓட விரட்டிதாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதி அலுமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). இவர்கணபதி ராமகிருஷ்ணாபுரத்தில்மோட்டார் பம்ப்நிறுவனம் நடத்தி வருகிறார். அதே பகுதியில்உள்ள ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும்பாலகிருஷ்ணன் என்பவருக்கும்கார்த்திகேயனுக்கும் இடத்தகராறு இருந்து வந்துள்ளது. இதே போல பாலகிருஷ்ணனுக்கு அப்பகுதியில் உள்ள பலரிடமும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாகசரவணம்பட்டிகாவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்துள்ள நிலையில், கடந்த 14 மாதத்திற்கு முன்பு பாலகிருஷ்ணன் செல்வபுரத்தைசேர்ந்தபாட்டில் மூடி வியாபாரம் செய்யும் ராமச்சந்திரன் என்பவரை கார்த்திகேயனுக்கு சொந்தமானஇடத்தில் கம்பெனி வைக்க முயற்சித்த போது, தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நள்ளிரவு 2 மணியளவில் பாலகிருஷ்ணனும், ராமசந்திரனும் இரண்டு லாரிகளில் சுமார் 75 பேரை கூட்டி வந்து கார்த்திகேயனின் குடோன்பூட்டை உடைத்து லாரிகளில் இருந்த ராமசந்திரனின் பொருட்களை இறக்கி வைத்து கொண்டிருந்தனர்.
இதை அறிந்து அங்கு சென்ற கார்த்திகேயன், இதுகுறித்து பாலகிருஷ்ணன் மற்றும் ராமச்சந்திரனிடம் கேள்வி எழுப்பிய போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் பாலகிருஷ்ணனும் ராமசந்திரனும் அங்கே கீழே இருந்த இரும்பு ராடுகளை எடுத்து கார்த்திகேயனை சரமாரியாக தாக்கினார்கள்.
இதில் கார்த்திகேயனுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தோடியது. மேலும் அந்த கும்பல் கார்த்திகேயனை ஓட ஓட விரட்டி தாக்க தொடங்கினர். அங்கிருந்து விளாங்குறிச்சி சாலைக்கு ரத்த காயங்களுடன் அலறியபடி வந்த கார்த்திகேயனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அங்கிருந்த கும்பல் தாங்கள் வந்திருந்த லாரி மற்றும் பொருட்களை விட்டு விட்டு தப்பி சென்றனர். பின்னர் படுகாயமடைந்த கார்த்திகேயன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பாலகிருஷ்ணன் , ராமசந்திரன் மற்றும் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும், கார்த்திகேயன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக, சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள் நடைபெற்று வரும் மோதல் மற்றும் அடிதடி சம்பவங்கள் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.