பல்லடம் அருகே பனியன் மில்லில் திடீர் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

பல்லடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்த பனியன் வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பனியன் துணிகள், கட்டிடம், இயந்திரங்கள் என்று பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.


திருப்பூர்: பல்லடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்த பனியன் வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பனியன் துணிகள், கட்டிடம், இயந்திரங்கள் என்று பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். அதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார். அங்கு பஞ்சு கழிவிலிருந்து நூல் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணி புரிந்து வருகின்றனர். வழக்கம் போல் இன்றும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது திடீரென இயந்திரங்களில் இருந்து புகை வந்தது.



அதனை தொடர்ந்து பஞ்சு கழிவுகள் மற்றும் பனியன் வேஸ்ட் குடோனில் தீ பரவியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியே சென்று பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



தகவல் கிடைத்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள், இயந்திரங்கள், பஞ்சு கழிவுகள் கட்டிடங்கள் என அனைத்து பகுதிகளில் தீ மளமளவென பரவியது.



மேலும் தண்ணீர் லாரிகள் மூலம் தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.



இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள் மற்றும் கட்டிடம் இயந்திரங்கள் முற்றிலும் சேதமடைந்தது.



தீயணைப்பு துறையினர் 1 மணிநேரமாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...