கோவையில் 1.75 கிலோ தங்கத்துடன் மாயமான மேற்கு வங்க இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்..!

கோவையில் தங்க நகை வியாபாரிகளிடம் சுமார் 1.75-கிலோ மதிப்பிலான சுத்தத் தங்கத்தை வாங்கி தங்கத்துடன் மாயமான மேற்கு வங்க இளைஞரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் 1.75 கிலோ தங்கத்துடன் மாயமான மேற்கு வங்க இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுஜித் மைட்டி. இவர் கோவை செட்டி வீதியில் அறை எடுத்து தங்கி வசித்து வந்தார். மேலும் கோவையில் தங்க நகைக்கடை உரிமையாளர்களிடம் சுத்தத் தங்கமாக வாங்கி நகைகளை செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கோவை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தங்க நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 7-ஆம் தேதி சுஜித் மைட்டி இடம் 759 1.58 ஜீரோ கிராம் சுத்தத் தங்கத்தை நகைகள் செய்ய கொடுத்துள்ளார்.

கிட்டத்தட்ட நீண்ட நாட்கள் ஆகியும், நகைகள் செய்து கொடுக்காமலும் அவரது செல்போன் எண் உபயோகத்தில் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த சந்தோஷ் கோவை செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கோவை செட்டி வீதியை சேர்ந்த கனகராஜ் 53 என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார்.

இவரிடமும் வழக்கமான சுஜித் கடந்த சில மாதங்களாக தங்க நகைகளை செய்து கொடுத்து வந்துள்ளார். இதனை நம்பி கடந்த 16-ஆம் தேதி இவர் சுஜித் இடம் 420-கிராம் சுத்தத் தங்கத்தை கொடுத்துள்ளார்.

அதேபோல் கனகராஜன் நண்பரே ஐநூத்தி எழுபத்தி எட்டு கிராம் தங்கத்தையும், தங்க நகைகள் செய்ய கொடுத்துள்ளார். ஆனால் தங்கத்தை வாங்கி சென்ற அவர் திரும்ப நகைகளும் கொடுக்காமல் செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துள்ளதால் சந்தேகமடைந்த கனகராஜ் கோவை பெரியகடை வீதி போலீசில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவையில் அடுத்தடுத்து இரண்டு மூன்று தங்க நகை வியாபாரிகளிடம் சுமார் 1.75-கிலோ மதிப்பிலான சுத்தத் தங்கத்தை தங்கத்துடன் மாயமான மேற்குவங்க இளைஞரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...