கோவையில் பெண் ஐடி ஊழியரை தாக்கி செயின் பறிப்பு - இளைஞர் கைது..!

கத்தியை காட்டி செயின் பறிக்க முயன்ற இளைஞரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் பெண் ஐடி ஊழியரை தாக்கி செயின் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மகள் திவ்யா (25). சென்னையை சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வரும் திவ்யா, நேற்று தனது இருசக்கர வாகனத்தில் கீரணத்தம் - சாராக்குளம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திவ்யா சென்ற இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்துள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த திவ்யாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.

இதனால் திவ்யா சத்தம் போடவே அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து தப்ப முயன்ற நபரை மடக்கிப் பிடித்தனர். அவரை சரமாரியாக தாக்கிய கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர் கோவை நல்லாம்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த அரவிந்தன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து கத்தியை காட்டி செயின் பறிக்க முயன்ற அரவிந்தனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...