கோவையில் இன்று கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகைப்பட கண்காட்சி..!

கலைஞர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்ததை அடுத்து, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலைஞரின் அரசியல் வாழ்க்கை மற்றும் மக்கள் நல திட்ட புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



கோவை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் கலைஞர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்ததை அடுத்து, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலைஞரின் அரசியல் வாழ்க்கை மற்றும் மக்கள் நல திட்ட புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியைமாவட்ட ஆட்சியர் ஜி எஸ்.சமீரன் பார்வையிட்டார்.



இந்த புகைப்பட கண்காட்சியில் கலைஞர் முதல்வராக பொறுப்பேற்ற நிகழ்வு முதல் அவர் அரசியல் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள், முன்னாள் பிரதமர்கள் போன்ற முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் நடந்த சந்திப்புகள், தமிழக முன்னாள் முதலமைச்சர்கள், பெரியார், அப்துல்கலாம் ஆகியோரைசந்தித்த தருணங்கள், மக்கள் நலத்திட்டங்கள் வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.



மேலும், கோவை மாவட்டத்தில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் கலைஞர் கோவை மாவட்டத்திற்கு வழங்கிய நலத்திட்ட புகைப்படங்களும் இந்த புகைப்பட கண்காட்சியில்காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.







Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...