கோவை கிணத்துக்கடவில் 15-லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை -எம்எல்ஏ பங்கேற்பு..!

கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் 1-வது வார்டு , 2-வது வார்டு ஆகிய பகுதிகளில் தடுப்பு சுவர் மற்றும் மழைநீர் வடிகால் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.


கோவை: கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் 1-வது வார்டில் தடுப்புச்சுவர் அமைக்கவும், 10-வது வார்டு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கவும் பொதுமக்கள் எம்.எல்.ஏ செ.தாமோதரனிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து 1-வது வார்டு பகுதியில் ரூ.13-லட்சத்து 20-ஆயிரம் செலவில் தடுப்பு சுவர் அமைக்கவும், 10-வது வார்டு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.2.70-லட்சம் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கவும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மொத்தம் 15-லட்சத்து 70-ஆயிரம் ரூபாய் ஒதுக்கினார்.

இந்நிலையில், கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் 1-வது வார்டு , 2-வது வார்டு ஆகிய பகுதிகளில் தடுப்பு சுவர் மற்றும் மழைநீர் வடிகால் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

பூமி பூஜை விழாவிற்கு கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ செ.தாமோதரன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். பூமி பூஜை விழாவிற்கு கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் ரா.கதிர்வேல், துணை தலைவர் பாலகுமார், வார்டு கவுன்சிலர்கள் டி.எல்.சிங். மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிணத்துக்கடவு பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல்லா வரவேற்று பேசினார். பூமி பூஜை விழாவில் கிணத்துக்கடவு பேரூராட்சி கவுன்சிலர்கள் கனகராஜ், சண்முகப்பிரியா, கவிதா, உதயபானு, பாலமுருகன் கிருஷ்ணவேணி, நாகவள்ளி, பாக்கியலட்சுமி, தேவி, சக்தி சரண்யா, கார்த்திகேயன் கிணத்துக்கடவு அ.தி.மு.க நகர செயலாளர் கே.என். மூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...