பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என்சிசி மாணவிகள் சைக்கிளின் நன்மைகள் மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கோவை: உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு என்சிசி மாணவிகள் சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி- நூற்றுக்கும் மேற்பட்ட என்சிசி மாணவிகள் கலந்து கொண்டனர்.
உலக சைக்கிள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என்சிசி மாணவிகள் சைக்கிளின் நன்மைகள் மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணியை, 5-வது பட்டாலியன் மேஜர் சுபேதார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட என்சிசி மாணவிகள் கலந்து கொண்டு உலக சைக்கிள் தின போஸ்டர்களை ஏந்தி கலந்து கொண்டனர்.