திருப்பூரில் பைக்கில் வந்து, பைக்கை லாவகமாக திருடி சென்ற மர்ம நபர்கள்; சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை.

திருப்பூர் கொங்கு நகர் பகுதியில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து, திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் கொங்கு நகர் பகுதியில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து, திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர், கொங்கு நகர் 4வது வீதியில் வசித்து வருபவர் ராஜதுரை. இவர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பிய ராஜதுரை, வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி விட்டு உறங்கச் சென்றுள்ளார்.

பின்னர் காலையில் வெளியே வந்து பார்த்தபோது, தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், தன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது, நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து தனது பைக்கின் பூட்டை உடைத்து தள்ளிச் சென்றது தெரியவந்தது.



இதையடுத்து, திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு ராஜதுரை தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் துறையினர், கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற நபர்களை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் பைக்கின் பூட்டை உடைத்து, திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...