கோவையில் RTI-சட்டத்தில் கேள்வி கேட்ட சமூக ஆர்வலரை விசாரித்த சம்பவம்: காவல் ஆய்வாளர்களுக்கு மனித உரிமை ஆணையம் அபராதம்..!

RTI-சட்டத்தில் கேள்வி கேட்ட சமூக ஆர்வலரை நள்ளிரவில் வீடு புகுந்து அழைத்துச் சென்று விசாரித்த சம்பவம் தொடர்பாக, கோவை காவல் ஆய்வாளர்களுக்கு மனித உரிமை ஆணையம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


கோவை: RTI-சட்டத்தில் கேள்வி கேட்ட சமூக ஆர்வலரை விசாரித்த சம்பவம் தொடர்பாக, காவல் ஆய்வாளர்களுக்கு மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்துள்ளது.

கோவை மதுக்கரை அருகே உள்ள திருமலையம்பாளையம் வார்டு 2-ல் கவுன்சிலராக உள்ளவர் ரமேஷ், கடந்த 2019-ஆம் ஆண்டு திருமலையம்பாளையம் பேரூராட்சியில் திட கழிவுகள் மேலாண்மை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டிருந்தார்.

இதற்கு ஆரம்பத்திலிருந்தே பேரூராட்சி செயல் அலுவலர் தூண்டுதலின் பேரில் பல்வேறு மிரட்டல்கள் வந்துள்ளதாக ரமேஷ் தெரிவித்து வந்தார்.

இதை தொடர்ந்து சமூக ஆர்வலர் ரமேஷ் வீட்டிற்கு நள்ளிரவில் வந்த அப்போதைய மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி, வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன், மற்றும் க.க.சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்த் குமார் ஆகியோர் சட்டவிரோதமாக சமூக ஆர்வலரை வீட்டில் இருந்து அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர் ரமேஷ் மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மாநில மனித உரிமை ஆணையம் அப்போதைய மதுக்கரை மற்றும் வடவள்ளி ஆய்வாளர்களுக்கு தலா ரூ.25-ஆயிரம், உதவி ஆய்வாளர் ஆனந்தகுமாருக்கு ரூ.50-ஆயிரம் என 3-பேருக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

மேலும் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...