கோவையில் 13 சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் தொல்லை - பெயிண்டர் போக்சோவில் கைது.…!

சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த 18 வயதான வாலிபர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொல்லை அளித்த பெயிண்டிங் வேலை செய்து வந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அளித்தனர்.

கோவையில் 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கும் கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பஷீர் (19) என்ற பெயிண்டிங் வேலை செய்து வந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, பஷீர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமியை காணவில்லை என கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, மகளிர் காவல் ஆய்வாளர், தவ்லத் நிஷா விசாரணை நடத்தி சிறுமியை தேடி வந்தார்.

விசாரணையில், சிறுமியை பஷீர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்யாமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.



இதையடுத்து, பஷீர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...