தமிழகத்தில் 2 மாதங்களில் காற்றாலைகள் மூலம் 2,000 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 40 மில்லியன் யூனிட் மின்சாரம் அதிகம் கிடைத்துள்ள நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் 2000 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் 2,000 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) உற்பத்தி துறை முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே கடந்த மார்ச் 15ல் காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் தொடங்கியது. கடந்த இரண்டு மாதங்களாக காற்றாலைகள் மூலம் அதிக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக மின் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (IWPA) தலைவர், கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:



தமிழகத்தில் தினசரி மின் தேவை 15,000 மெகாவாட் ஆக உயர்ந்துள்ள நிலையில் காற்றாலைகள் சீசன் தொடங்கியுள்ள காரணத்தால் தினசரி மின் நுகர்வில் காற்றாலைகள் அதிக பங்களிப்பு செய்து வருகின்றன. குறிப்பாக கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டும் 1,910 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 40 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் அதிகம் கிடைத்துள்ளது. எதிர்வரும் மாதங்களிலும் அதிக காற்று வீசும் என்ற காரணத்தினால் தினசரி மின் நுகர்வில் காற்றாலை மின் உற்பத்தியின் பங்கு தொடர்ந்து அதிகரிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...