போலீசார் தேடுவதை அறிந்த கள்ளக்காதலன் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்: திருப்பூரில் 2-மகன்களுடன் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசாரால் தேடப்பட்டு வந்த கள்ளக்காதலன் காங்கேயம் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் பிணமாக மீட்பு.
திருப்பூர் அருகே உள்ள சேடர்பாளையம் மெட்டுவாதோட்டம் பாலாஜி நகர் பகுதியில் வாடகை வீட்டில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துமாரி (35) மற்றும் அவரது மகன்கள் தர்னிஷ் (9), நித்திஷ் (4) ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இதில் முத்துமாரி அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், முத்துமாரி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, பாலாஜி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். மேலும் அவருக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த பகுதியில் முத்துமாரி அந்த நபருடன் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 23-ந் தேதி காலை முத்துமாரியின் வீடு நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் அவரை அழைத்துள்ளனர். ஆனால் உள்ளிருந்து முத்துமாரி பதில் குரல் எழுப்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் முத்துமாரி மற்றும் அவரது மகன்கள் என 3 பேரும் பிணமாக கிடந்துள்ளனர்.
இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

தொடர்ந்து பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்த ரத்தம் படிந்த பாய் மற்றும் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றிச் சென்றனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு வந்தார்.
அவர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வெற்றி வரவழைக்கப்பட்டு இருந்தது. மோப்ப நாய் அந்த பகுதியில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்நிலையில் முத்துமாரியின் கள்ளக்காதலன் கொலை சம்பவம் நடந்த நாளிலிருந்து அங்கு வரவில்லை.
இதனால் கள்ளக்காதலனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும், கொலையாளியை கண்டுபிடிக்க மாநகர கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், 150 போலீசார் குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

போலீசாரின் விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது குஜராத் மாநிலம் போர்பந்தரை சேர்ந்த கோபால் என்ற கார்த்திக் (50) என்பது தெரியவந்தது. இதனால் போலீசார் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
முதற்கட்டமாக கோபால் வேலை செய்த ஒரு பல்பொருள் அங்காடியில் வேலை செய்தபோது அங்கு அவரது உருவம் பதிவான புகைப்படத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். அப்போது காங்கேயம் படியூர் பகுதியில் கோபால் சைக்கிளில் சுற்றித்திரிந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாநகர பகுதிகளில் கோபால் சுற்றித்திரிந்தார். இதனால் மாநகர பகுதிகளில் போலீசார் கண்காணித்து வந்தனர்.

இதற்கிடையே இன்று காலை காங்கேயம் படியூர் அருகே உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் சைக்கிளுடன் ஒருவர் பிணமாக கிடப்பதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றினர்.

அப்போது பிணமாக கிடந்தது முத்துமாரியின் கள்ளக்காதலன் கோபால் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய காங்கேயம் போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசார் தேடுவதை அறிந்த கோபால் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு சென்று பார்வையிட்டார்.