கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக சீமானை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!

ஆர்.எஸ்.புரத்தில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசிய சீமானை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை பற்றி அவதூறாக பேசிய சீமானை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்.எஸ்.புரத்தில் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் M.ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் G.V.நவீன் குமார் முன்னிலை வகித்தார்.

கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் V.M.C மனோகரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சீமானின் உருவ படத்தை செருப்பால் அடித்தும் கிழித்து வீசியும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.



ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஐ.எஸ்.மணி, ரகுராமன், கணபதி அசோக்குமார், கோவை ஹனிபா, ஆர் ஜி பி நட்ராஜ், சக்தி சதீஷ், ராயல் சண்முகம், சாமுவேல் தாஸ், முருகேசன், கனகராஜ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மாநில செயலாளர் கோபிநாத், அருண்குமார், பன்னீர்செல்வம், பிரேம்குமார், புருஷோத்தமன்,நவீன், விஷ்ணு, சச்சிதானந்த மூர்த்தி, இந்துராஜ், அப்பாஸ், நவ்ஃபல், நித்தியானந்தம், சக்கரவர்த்தி, பாலாஜி, பிரவீன், கோகுல், தாண்டவமூர்த்தி, விவேக், ரமேஷ், சௌந்தர், சூரஜ், சதீஷ், கார்த்திகேயன், தனுஷ், சந்தோஷ், கீர்த்தி நிசார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...