கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கோவை: கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை மாவட்டம் பேரூரை அடுத்த பச்சாபாளையத்தில் கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) உள்ளது. இந்நிலையில், இங்கு பணியாற்றும் 20 பேருக்கு பணி நிரந்தரம் செய்ய உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக புகார்கள் எழுந்தன.
இதன் அடிப்படையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கூடுதல் எஸ்.பி திவ்யா தலைமையில் ஆவின் நிறுவனத்தில் நேற்று திங்கட்கிழமைமாலை திடீர் சோதனை நடத்தினர்.
வளாகத்தில் உள்ள பொது மேலாளர் அறை, மேலாளர்கள் அறை, அதிகாரிகள் அறை, தயாரிப்புக் கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குழுவாக பிரிந்து சோதனை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு வரை நடந்தது.
இந்த சோதனையின் போது, ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் முதுநிலை தொழிற்சாலைஉதவியாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தியின் அலுவலக மேஜை அறையில் இருந்து ரூ.2.50 லட்சம் தொகை, அவரது காரில் இருந்து ரூ.5.90 லட்சம் தொகை என மொத்தம் ரூ.8.40 லட்சம் தொகையை போலீசார் கைப்பற்றினர்.
இந்த தொகைக்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால், கிருஷ்ணமூர்த்தியால் கைப்பற்றப்பட்ட தொகைக்கு உரிய விளக்கம் தர முடியவில்லை. இதையடுத்து அது ஊழியர்களிடம் இருந்து லஞ்சமாக பெற்ற தொகை என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த தொகையை போலீசார் பறிமுதல் செய்தனர். கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியின் மீது லஞ்ச ஒழிப்புத்துறைபோலீசார், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.