தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்கள் தமிழர்களுக்கே - கோவையில் CITU -வினர் பி.எப் நிறுவனத்தை முற்றுகை..!

மத்திய அரசு நிறுவனங்களில் ஹிந்தி தெரிந்தவர்களையே நியமிப்பதாகவும், தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ் தெரிந்த அலுவலர்களை பணியமர்த்த வேண்டும் என கோவையில் சிஐடியு வினர் பி.எப் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.



கோவை: தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ் தெரிந்த அலுவலர்களை பணியமர்த்த வேண்டும் என சிஐடியு வினர் பி.எப் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் ஹிந்தி தெரிந்த அலுவலர்களே பெரும்பாலும் பணியில் இருப்பதாகவும், தமிழ் தெரிந்த அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தியும், சிஐடியு சார்பில், பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தை CITU வினர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முற்றுகை ஈடுபட முயன்றனர்.



அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மேலாளரை சந்திக்க ஏற்பாடு செய்ததையடுத்து முற்றுகை போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய CITU மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மத்திய அரசு நிறுவனங்களான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், வங்கி, ரயில்வே போன்ற அலுவலகங்களில் ஹிந்தி தெரிந்தவர்களையே மத்திய அரசுபணியில், நியமிப்பதாகவும், இதனால் பொதுமக்கள்தொழிலாளர்கள் அந்தந்த அலுவலகங்களில் அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு சேவைகளை பெறுவதற்கு பெரும் சிரமம் ஏற்படுவதாகவும், எனவே மத்திய அரசு தமிழகத்தில் தமிழ் தெரிந்த அலுவலர்களை நியமிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இல்லையெனில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களைமுன்னெடுப்போம் என கூறினார்.



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...