புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் வழங்காததை கண்டித்தும், 40-ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணியினை மறுக்கும் நடவடிக்கையை கண்டித்தும் ஏஐடியுசி சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி AITUC சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் அரிசி கடை வீதியில் உள்ள அரிசி கடைகளில் 70-க்கு மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவடைந்து 6 மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் அரிசி கடை உரிமையாளர் சங்கத்தினர் தற்போது உள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறுஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தவில்லை.
பலமுறை வலியுறுத்தியும் இன்னும் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் வழங்காததை கண்டித்தும் 40 ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணியினை மறுக்கும் நடவடிக்கையை கண்டித்தும் திருப்பூர் அரிசி கடை வீதியில் பணிபுரியும்,ஏஐடியுசி சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.