தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்: கருணை கொலை செய்து கொள்ள அனுமதி வேண்டி கோவையில் விவசாயிகள் மனு..!

அவ்வப்போது வன விலங்குகளால் விவசாயிகள் தாக்கப்பட்டு சில சமயங்களில் உயிரிழக்க நேரிடுவதாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள நிலையில் கருணை கொலை செய்து கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: வனவிலங்குகளால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என கருணை கொலை செய்து கொள்ள அனுமதி வேண்டி விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

கோவையில் வன விலங்குகளால் விளைநிலங்களுக்கு அதிக சேதாரம் ஏற்படுவதாகவும், இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், எனவே தாங்கள் கருணைக் கொலை செய்து கொள்ள அனுமதி வேண்டி தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் பல்வேறு விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அவர்கள் அளித்த மனுவில், சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் நிலையில், யானைகள் காட்டுப் பன்றிகள் குரங்கு காட்டெருமை சிறுத்தை போன்ற வனவிலங்குகளால்விளைநிலங்கள் அடிக்கடி சேதப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவ்வப்போது வன விலங்குகளால் விவசாயிகள் தாக்கப்பட்டு சில சமயங்களில் உயிரிழக்க நேரிடுவதாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள நிலையில் கருணை கொலை செய்து கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஜூலை 5-ஆம் தேதி கோவையில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி தமிழகம் தழுவிய பேரணி நடத்தி காட்டுப் பன்றிகளை விவசாயிகளே அடித்துக் கொல்வது என்று முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...