வேலைவாய்ப்பு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் போராட்டம்..!

எங்கே எனது வேலை..? என்ற பதாகைகளை ஏந்தியபடி வேலைவாய்ப்பு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.


கோவை: AIYF ன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.



தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு பணியிடங்களை தமிழக இளைஞர்களுக்கே முழுமையாக வழங்கிட வேண்டும், மத்திய மாநில அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும், பகத்சிங் தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.



ஓய்வு பெறும் அரசு பணியாளர்களின் வயதுவரம்பு 58 ஆக மாற்ற வேண்டும், தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்ற வேண்டும், தற்காலிக, ஒப்பந்த முறையைத் தவிர்த்து பணி நியமனங்களை நிரந்தரமாக்க வேண்டும், சிறு குறு தொழில்கள் தொடங்குவதற்கு இளைஞர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியமாக 20 ஆயிரம் என சட்டம் இயற்ற வேண்டும், பெண்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் உத்தரவாதப்படுத்த வேண்டும், போலிச் சான்றிதழ்கள் மூலம் வேலைவாய்ப்புகளை பறிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.



அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோவை மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாநிலத் தலைவர் குணசேகர் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...