உத்தராகண்ட் விபத்தில் பலியான கோவை பத்திரிக்கையாளருக்கு மாவட்ட பத்திரிகையாளர் மன்றம் சார்பில் அஞ்சலி..!

கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள், செய்தி நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள் பலரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.


கோவை: உத்தராகண்ட் மாநிலத்தில் விபத்தில் உயிரிழந்த கோவை பத்திரிக்கையாளருக்கு கோவை மாவட்ட பத்திரிகையாளர் மன்றம் சார்பில் அஞ்சலி செலுத்தினர்.



நேற்று முன்தினம் உத்தராகண்ட் மாநிலம் கங்கோத்ரிக்கு 14 பேர் வேனில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்தவேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோவையை சேர்ந்ததனியார் ஆங்கில நாளிதழ் (தி இந்து) செய்தியாளர் கார்த்திக் மாதவன்(45) உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

கார்த்திக் மாதவன் உயிரிழப்புக்கு தமிழக முதல்வர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.



இதில் கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள், செய்தி நிருபர்கள் ஒளிப்பதிவாளர்கள் பலரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.



Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...