குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் காரணமாக குடிநீரை சேமித்து வைத்து சரியான முறையில் பயன்படுத்தாமல் பழைய தண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
கோவை: வால்பாறை பகுதியில் சுகாதார சீர்கேடு காரணமாக டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் காரணமாக பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சரியான முறையில் பயன்படுத்தாமல் பழைய தண்ணீரைப் பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

வால்பாறை நகராட்சிக்கு உட்பட அண்ணா நகர கக்கன் காலனி, சிறுவர் பூங்கா காமராஜர் நகர் போன்ற பகுதியில் குடியிருக்கும் 20 ஆயிரம் பேர்களுக்கு நகராட்சி சார்பாக விநியோகம் செய்யப்படும் குடிநீர் சில மாதங்களாக புதிய தண்ணீர் தொட்டி கட்டும் பணியால் சரியாக தண்ணீர் விநியோகம் செய்ய முடியாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
இதனால் பொது மக்கள் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று தண்ணீரைச் சேமித்து வைத்து உபயோகம் பண்ணுகிறார்கள். மேலும் சாலை ஓரம் அமைக்கப் பட்ட குப்பை கிடங்கில் முறையாக குப்பைகளை அகற்றாமல் சாலை ஓரம் சிதறி கிடப்பதால் துர்நாற்றம் விசியும் கொசுக்கள் உற்பத்தியாகிவருகிறது.

இதனால் சிறுவர் பூங்கா பகுதி குடியிருப்பு பகுதியில் 30-க்கும்மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர். வால்பாறை நகராட்சியில் தூய்மைபணியாளர்கள் பொது மக்கள்குடியிருப்பு பகுதியில் கொசு மருந்துகளை வீடு தோறும் தெளிக்காமல்சாலை ஓரம் மருந்து தெளிப்பதால் கொசுக்களை அழிக்க முடியாமல் உள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுகாதாரத் துறையினர்மருத்துவமனையிலிருந்து தூய்மை பணியாளர்களை கொண்டு வீடு வீடாகச் சென்று கொசு மருந்துகள் தெளித்து கொசுக்களை அளிக்கவும் வீடு வீடாக ஆய்வு செய்து டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும் சுகாதார மருத்துவர் பாபு லட்சுமணன் கூறுகையில், தண்ணீரைச் சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டாம், தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து பயன்படுத்தவும் வீடுகள் பகுதியில் தண்ணீர் தேங்கும் நிலையில் உள்ள பொருட்களை அகற்றவும், தண்ணீர் சேமித்து வைக்கும் பத்திரங்களை நன்கு மூடிய நிலையில் வைக்கவும், தூய்மையாக இருக்கவும்காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர வேண்டும்என்றும்தெரிவித்தனர்.