நூல் விலை உயர்வு: மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் SDPI-கட்சி ரயில் மறியல் போராட்டம்..!

அனுமதி இல்லாமல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட SDPI கட்சியை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


திருப்பூர்:தொடர்ந்து உயர்ந்து வரும் நூல் விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து SDPI கட்சியினர் திருப்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூரின் பிரதானதொழிலான பின்னலாடை தொழிலுக்கு முக்கிய மூலப்பொருள் நூல். நூலின் விலை கடந்த 20 மாதங்களாக உயர்ந்தவாறே உள்ளது. தொழில்துறையினரின் பலகட்ட கோரிக்கைகளுக்கு பிறகு நூலின் இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்தது.

அதன்பிறகும் நூலின் விலை குறையாமல் உயர்ந்தது. இந்நிலையில் நூல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி தொழில்துறை சார்பிலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.



அந்த வகையில் இன்று , நூலின் விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து SDPI சார்பில் இன்று திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.சுமார் 50 க்கும் மேற்பட்டோர் நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு ரயில் நிலைய நுழைவாயில் வந்து, காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை தள்ளி உள்ளே நுழைந்து ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராககோஷங்கள் எழுப்பினர்.



பஞ்சு மற்றும் நூல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பஞ்சு பதுக்கலை கண்டறிந்து தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பியவாறு சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

அனுமதி இல்லாமல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட SDPI கட்சியை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...