கோவை கணபதி பகுதியில் உள்ள சங்கனூர் மின் மயானத்தையும் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை தரம் பிரிக்கும் மையத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை:கோவை சங்கனூர் மின் மயானத்தையும் குப்பை தரம் பிரிக்கும் மையத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.

இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், மின் மயானத்திற்கு அருகாமையில் தனியார் பள்ளி இருப்பதாகவும், மாநகராட்சி குப்பை தரம் பிரிக்கும் மையத்திற்கு அருகில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடியிருப்பதாலும் அங்கிருந்து வரும் புகை, கழிவு துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுவதாகவும், எனவே மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையம் மற்றும் மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கைகள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.