பாலிதீன் கவர்கள் ஒழிப்பு என்ற பெயரில் சிறு வணிகர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு வணிகர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்ட சுதேசி வணிகர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
வணிகர் சங்கத் தலைவர் மணிகண்டன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கோவை மாவட்டத்தில் பாலிதீன் அவர்கள் ஒழிப்பு என்ற பெயரில் அரசு அலுவலர்கள் சோதனை நடத்துவதில் சிறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், முதலில் பாலீதீன் கவர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.
மேலும், பாலிதீன் பொருட்களை மாநில எல்லைகளிலேயேதடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாலிதீன் உற்பத்தியை தடுக்க வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.